அமைச்சரவை விரிவாக்கம்: கவர்னரை சந்தித்தார் முதல்வர் 

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 06:20 pm
nitish-kumar-meets-bihar-governor

மாநில அமைச்சரவையில் மேலும் புதிய அமைச்சர்களை சேர்க்க முடிவெடுத்துள்ள பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், அந்த மாநில கவர்னரை இன்று நேரில் சந்தித்து, அமைச்சர்களாக பொறுப்பேற்போர் பட்டியலை அவரிடம் அளித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, மதசார்பற்ற ஜனதாதளம் - பாஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநில அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள முதல்வர் நிதிஷ் குமார். அதற்கான பட்டியலை தயார் செய்துள்ளார். 

புதிதாக மேலும் நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களின் பெயர் பட்டியலுடன், முதல்வர் நிதிஷ் குமார், மாநில கவர்னர் லால்ஜி டாண்டனை இன்று நேரில் சந்தித்தார். கவர்னர் ஒப்புதல் அளித்ததும், நாளை காலை, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close