முதல்வரை மாற்ற ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 08:43 pm
congress-mla-s-wish-to-change-cm-in-rajashtan

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டை மாற்றி விட்டு, அவருக்கு பதிலாக சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியான காங்., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். 

ராஜஸ்தானில், காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்., படுதாேல்வி அடைந்தது. இதையடுத்து, கெலாட் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இளம் தலைவர் சச்சின் பைலட்டை உடனடியாக முதல்வராக்க வேண்டும் என்றும், காங்., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். 

இதுகுறித்து, காங்., எம்.எல்.ஏ., பிருத்விராஜ் மீனா கூறுகையில், ‛‛மக்கள் மத்தியில் செல்வாக்கற்ற தலைவரான கெலாட்டுக்கு பதிலாக, மக்கள் செல்வாக்குள்ள சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும். அவரால் தான் மாநிலத்தில், காங்., ஆட்சி அமைத்தது. அதனால், அவர்தான் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர். இதுவே, ஒட்டு மாெத்த காங்., எம்.எல்.ஏ.,க்களின் விருப்பம்’’என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close