குடிசை வீடுகளில் சோலார் பேனல்: அசத்திய ஐ.ஐ.டி., மாணவர்கள்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 10:07 pm
solar-panel-in-mp-village-by-iit-mumbai-students

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓர் கிராமத்தில், 74 குடிசை வீடுகளில் சோலார் பேனல் அமைத்து, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில், மின் அடுப்புகளை இயக்கி சமையல் செய்ய வைத்துள்ளனர் மும்பை ஐஐடி மாணவர்கள். 

சூரிய மின் சக்தியை பயன்படுத்தி, கிராமங்களிலும் மின் இணைப்பு வழங்க மத்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ம.பி., மாநிலம், பஞ்சா கிராமத்தில் உள்ள 74 குடிசை வீடுகளின் முன், சோலார் மின் உற்பத்தி பேனல்கள் வைத்து, மின்சாரம் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

மத்திய அரசு திட்டத்தின் கீழ், மும்பை ஐஐடி மாணவர்கள் இந்த சோதனை முயற்சியை மேற்கொண்டனர். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, அந்த வீடுகளில் இண்டக்ஷன் அடுப்புகள் வைக்கப்பட்டு, அதில் சமையல் செய்யப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தை, நாட்டின் பல்வேறு கிராமங்களிலும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close