அரசு பங்களாவை காலி செய்தார் அருண் ஜெட்லி!

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 07:40 pm
ex-minister-arun-jaitly-vacates-government-bungalow

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான  புதிய அமைச்சரவையில் இடம் பெறாததை அடுத்து, அவருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த பங்களாவை காலி செய்துவிட்டு, தன் சொந்த வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். 

பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அருண் ஜெட்லி, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான, 2014 - 2019 ஆட்சி காலத்தில், மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார். மத்திய அமைச்சர் என்ற வகையில், டெல்லியில் அவருக்கென அரசு பங்களா ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அதில் குடியிருந்தார். 

அதே போல், மத்திய அமைச்சருக்கு வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், உடல் நிலை காரணமாக, ஓய்வெடுக்க விரும்பிய ஜெட்லி, பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தான் பங்கேற்க விரும்பவில்லை என கூறினார். அவரின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. 

எனினும், தொடர்ந்து கட்சிப் பணிகளிலும், எம்.பி., என்ற முறையில், பார்லிமென்ட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவேன் என அறிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சரவையில் இடம் பெறாத போது, அரசு பங்களாவில் வசிப்பது முறையாகாது எனக் கருதிய அவர், அரசு சார்பில் தனக்கு வழங்கப்பட்டிருந்த பங்களாவை காலி செய்து, டெல்லியில் உள்ள தன் சொந்த வீட்டில் குடியேறினார். 

அதே போல், தான் அமைச்சராக இல்லாததால், அமைச்சருக்குரிய பாதுகாப்பு இனியும் தனக்கு தேவையில்லை எனக் கூறிய ஜெட்லி, தன் பாதுகாப்பை குறைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து, அவரது இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் வேறு பணிக்கு அனுப்பப்பட்டனர். 

முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான வாஜ்பாய் மறைவுக்குப் பின், அவரது வளர்ப்பு மகளும், அவரது குடும்பத்தாரும், வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டிருந்த அரசு பங்களாவை உடனடியாக காலி செய்து, அரசிடம் ஒப்படைத்தனர். வாய்பாயை கவுரவிக்கும் வகையிலும், அவரது நினைவாகவும், அவர் வாழ்ந்த அரசு இல்லத்தை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு முன் வந்த போதும், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். 

இந்நிலையில், வாஜ்பாயின் உறவினர்கள் வழியை பின்பற்றி, அமைச்சர் பதவியில் இல்லாத அருண் ஜெட்லி அரசு பங்களாவை உடனடியாக காலி செய்து அரசிடமே ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close