முதல்வருடன் மாேதல்: அமைச்சருக்கு ஆப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 08:28 pm
siddhu-loses-urban-development-ministry-in-punjab

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குடன் தொடர்ந்து மாேதல் போக்கை கடைபிடித்து வந்த மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் அமைச்சரவை பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. 

பஞ்சாப்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, அமரீந்தர் தலைமையிலான அமைச்சரவையில், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த சித்து, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதியை சந்தித்தார். அவர்களுடன் சகஜமாக பேசிப் பழகிய சித்துவின் செயல், நாட்டு மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை பெற்றுத் தந்ததாக, கேப்டன் அமரீந்தர் குற்றம் சாட்டினார். அதன் காரணமாகவே, மக்களவை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகவும் கூறினார். 

ஏற்கனவே, சித்துவின் மனைவி, ‛‛மக்களவை தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும் வெற்றி பெறாவிட்டால், அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் அமரீந்தரின் கருத்துக்கு, சித்து மிகவும் கொச்சைத்தனமான வார்த்தைகளை பயன்படுத்தி, சித்து கருத்து தெரிவித்தார். இதையடுத்து, சித்துவிடம் இருந்த ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா துறை அமைச்சக பொறுப்பு பறிக்கப்பட்டு, அவரிடம் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

முதல்வருடனான தொடர் மாேதல் போக்கே, சித்துவின் அமைச்சரவை பொறுப்பு பறிபோனதற்கான காரணம் என பஞ்சாப் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close