17 கவுன்சிலர்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 07:11 pm
17-gjm-councilors-joins-bjp

மேற்கு வங்கத்தில், ஜிஜேஎம் கட்சியை சேர்ந்த, 17 கவுன்சிலர்கள் இன்று அந்த கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். 

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில், கணிசமான இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அந்த கட்சியிலிருந்து விலகி, பாஜவில் இணைந்தனர். அவர்களுடன், 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும், பாரதிய ஜனதாவில் ஐக்கியம் ஆகினர். 

இந்நிலையில், கூர்கா ஜனமுக்தி மாேர்ச்சா எனப்படும், ஜிஜேஎம் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், 17 பேர் அந்த கட்சியிலிருந்து விலகி, இன்று பாஜவில் இணைந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close