முன்னாள் முதல்வருடன் இந்நாள் முதல்வர் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 07:53 pm
yogi-meets-mulayam-at-his-residence


உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவை இந்நாள் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். 

உ.பி., மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்ததை அடத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவரை, இன்று, பா.ஜ.,வை சேர்ந்த, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அப்போது, முலாயம் உடன் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், முலாயமின் சகோதரர் சிவ்பால் யாதவ் உள்ளிட்டோரும் இருந்தனர். முலாயம் - யோகி சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close