முன்னாள் மத்திய அமைச்சருக்கு அமலாக்கத்துறை கிடுக்கி

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 11:16 pm
ed-summons-to-praful-patel-connetion-with-multi-crore-scam-case

சிவில் விமான போக்குவரத்து துறையில் பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான பிரபுல் படேலுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், பிரபுல் படேல். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரது தலைமையிலான துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close