பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மோடி; தேசியத் தலைவர் அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 04:37 pm
bjp-s-parliamentary-party-executive-committee-formed-ahead-of-the-first-parliament-session-of-modi-2-0

பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், தேசியத் தலைவராக அமித் ஷாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இன்று டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசியத் தலைவராக அமித் ஷாவும், மக்களவை துணைத் தலைவராக ராஜ்நாத் சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அதேபோன்று மாநிலங்களவைத் தலைவராக தாவர்சந்த் கெலாட், மாநிலங்களவை துணைத் தலைவராக பியூஷ் கோயல், அரசு கொறடாவாக பிரகலாத் ஜோஷி, அரசு துணை கொறடாவாக அர்ஜுன் ராம் மேக்வால்(மக்களவை), முரளிதரன்(மாநிலங்களவை) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close