பாஜக தேசியத் தலைவராக அமித் ஷாவே தொடர்வார்! - கூட்டத்தில் முடிவு

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 04:15 pm
amit-shah-will-be-continued-as-bjp-chief

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷாவே தொடர்வார் என பாஜக மாநில தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக தேசியத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. 

சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பின்னர், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பாஜக நாடாளுமன்ற குழுவின் தேசிய தலைவர் ஆகிய பொறுப்புகளையும் கூடுதலாக ஏற்று இருப்பதால் அவர் கட்சியின் தேசிய தலைவராக  முழுநேரமும் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாஜகவுக்கு இடைக்கால 'பொறுப்பு' தலைவர் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. 

இது தொடர்பாக இன்று தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில பாஜக தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா பங்கேற்றனர். 

கூட்டத்தின் முடிவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷாவே தொடர்வார் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட், ஹரியானா, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால்அமித் ஷா கட்சியின் தலைவராக இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் 'உறுப்பினர் சேர்க்கை' தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அமித் ஷா, 2019 தேர்தலில் பாஜக நிர்வாகிகளின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றும் இன்னும் நன்றாக செய்திருந்தால் அதிகப்படியான இடங்களை பெற்றிருக்க முடியும் என்றும் கூறியதாக கட்சியின் பொதுச் செயலர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close