பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு!

  முத்துமாரி   | Last Modified : 17 Jun, 2019 08:18 pm
j-p-nadda-elected-as-the-bjp-national-working-president

பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றிரவு நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில், பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"மத்திய உள்துறை அமைச்சராக தான் பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் தலைமை பொறுப்பை வேறு யாருக்காவது அளிக்க வேண்டும் என அமித் ஷா கூறி வந்தார். இதையடுத்து, பாஜகவின்  தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் " என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாஜக எம்.பி.யான ஜே.பி.நட்டா, முந்தைய பாஜக அரசில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close