ஜனநாயகத்தின் கரும்புள்ளி கர்நாடகா!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 07:26 pm
special-article-about-karnataka-politics

தனது ஆட்சியை எதிர்த்து போட்டியிட்டவர்களை தாங்கிப்பிடித்து ஆட்சி அமைக்க வைத்து, அதை வேடிக்கை பார்க்கும் வேதனையை அனுபவிக்கிறார், காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் குழுத் தலைவர் சித்தராமையா.  காங்கிரஸ் ஆட்சியை அகற்றி விட்டு, பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தனர். அது முழுமையாக இல்லை. இதன் காரணமாக வெறும் 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், ஆட்சி மாற்றம் தேவை என்று வாக்களித்தவர்களுக்கு எதிராக, தன்னை விட குறைந்த மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்து, ஆட்சியில் அமர வைத்தது. இதற்கு, தான் இழிவு பட்டாலும் பராவாயில்லை பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பது காரணம்.

பொட்டலில் விளாம்பழம் விழுந்த கதையாக, ஆட்சிக்கு வரவே முடியாது என்ற நிலையில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளம், வெறும் 37 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் கூட, ஆட்சியில் அமர்ந்தது. இதற்கான பின் விளைவு ஆளும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 9 அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 22 அமைச்சர்கள். இது போல இந்தியாவில் இதற்கு முன் வேறெங்கும் நடந்ததில்லை. முதல் முறையாக கர்நாடகத்தில் நடந்தது. 

பதவி வெறியை மட்டும் அடிப்படையாக கொண்ட இந்த நாடகத்தில், சித்தராமையாதான் அதிகம் பாதிக்கப்பட்டார். அதை வெளியே சொல்லக்கூட முடியாது. வடிவேலு போல மனதிற்குள்ளாகவே அழ வேண்டியது தான். இந்த கோமாளி ராஜியத்தை, லோக்சபா தேர்தல் தான் கவிழாமல் கட்டிப் போட்டது. எப்படியும் மோடி தோற்றுப்போவார் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். அது நடைபெறாமல் போகவே, ஒவ்வொருவராக காங்கிரஸ் கட்சியில் இருந்து கழண்டு கொண்டு வருகின்றனர்.

இதை கண்டிக்க வேண்டிய, பிரச்னையை சரி செய்ய வேண்டிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை, தானே ஆட்டம் கண்டு போய் உள்ளது. அவர்களுக்கு கர்நாடகாவில் நடப்பதை கண்டு கொள்ள நேரம் இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், பாஜக 106 இடங்களை வைத்துள்ளது. சுயேட்சைகளின் ஆதரவுடன் சேர்த்தால், அதிகபட்சமாக 110 இடங்கள் பிடிக்கலாம். இதை வைத்து ஆட்சியில் அமர்வதற்கு மிகவும் சிரமம் என்பதால், அது வேறு விதமாக முயற்சி செய்து வருகிறது.

இதன் பின்விளைவாக ஒட்டுமொத்தமாக 13 எம்எல்ஏகள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் 8 பேர் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர், மற்றவர்ளுடையதை சரியாக இல்லை என்றும், நேரில் கொடுக்க வேண்டும் என்றும் தள்ளுபடி செய்துள்ளார். இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களின் மொத்த எண்ணிக்கை, பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தேவையான மெஜாரட்டி கிடைக்கும் அளவிற்கு குறையாது.

அதே நேரத்தில், ஆட்சியை விட்டு செல்ல விரும்பாத காஙகிரஸ், ஜனதாதளம் அமைச்சரவையை மாற்ற வசதியாக அனைத்து அமைசர்களிடமும் ராஜினாமா கடிதம் பெற்றுள்ளனர். மறுபுறத்தில் ஏற்கனவே சீ, சீ புளிக்கும் என்று கட்சியை விட்டு ஓடிவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. 

அதை ஏற்றால் கூ.ட புதிதாக அமைச்சர் பதவியை ஏற்பவரை எதிர்த்து, ஏற்கனவே அமைச்சராக இருந்தவர் போர்கொடி பிடிப்பார். இது ஆட்சி முடியும் வரை தொடர்கதையாகத்தான் இருக்கும்.

இந்த நிலையில் சித்தராமையா வெளியேறிய எம்எல்ஏகள் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரை வலியுறுத்தினார்.

அது போல நடவடிக்கை எடுத்தால், சட்டசபையில் எம்எல்ஏகள் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் தற்போதுள்ள ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வரும். அல்லது ராஜினாமாவை ஏற்காமல், அவர்களை தகுதி நீக்கம் செய்தால் மீண்டும் வரும் தேர்தலில், அவர்கள் போட்டியிட முடியாதே தவிர்த்து, தற்போதுள்ள நிலையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படாது. 

அவர்களை தனி அணியாக செயல்பட அனுமதித்தால் கூட, அவர்கள்  பெரும்பான்மை கோரும் போது, எதிர்த்து வாக்களிக்க முடியும். அல்லது வெளிநடப்பு செய்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் நினைக்கும் முடிவை ஏற்படுத்த முடியும். எது எப்படி இருந்தாலும், நித்தியகண்டம் பூர்ண ஆயுசு என்ற பழமொழியின் இலக்கணமாக திகழும் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விட்டு, பாஜக ஆட்சி அல்லது தேர்தலைகொண்டு வருவது தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக அமையும். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close