சபாநாயகர் சட்டத்தை மதிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 04:42 pm
mallikarjuna-karke-comment-on-supreme-court-advise-to-karnataka-speaker

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களின் ராஜினாமா கடிதம் குறித்து, இன்று மாலைக்குள் முடிவெடுக்கும் படி, சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் அறிவுருத்தியுள்ளது. 

ஆனால், சட்டசபை சபாநாயகரான தனக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்றும், நீதிமன்றத்தின் அறிவுருத்தலும் தேவையில்லை என்றும், அந்த மாநில சட்டசபை சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‛‛அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கூறியதை அனைவரும் கேட்க வேண்டும் அதன் படி, கர்நாடக சட்டசபை சபாநாயகரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதே சிந்தது. அவரும், சட்டவிதிகளின் படி நடந்து கொள்வார் என நினைக்கிறேன். 10 எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலக விரும்பினால், அவர்கள் விருப்பப்படி விட்டுவிட வேண்டும். இதில் காலம் தாழ்த்த ஒன்றும் இல்லை’’ என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

மல்லிகார்ஜுன கார்க்கேவின் இந்த கருத்து, கர்நாடக மாநில அரசியலில் பெரும் புகைச்சலையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close