சபாநாயகர் முன் எம்.எல்.ஏ.,க்கள் ஆஜர்: கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 06:30 pm
mla-s-meets-speaker-of-karnataka-assembly

கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த காங்., எம்.எல்.,க்கள் 10 பேரும், உச்சநீதிமன்ற அறிவுருத்தலின் படி, இன்று மாலை சட்டசபை சபாநாயகர் முன் ஆஜராகினர். இதனால், அந்த மாநில அரசியலில் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

கர்நாடகாவில், ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, தங்கள் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். 

அவர்களின் ராஜினாமாவை ஏற்றால், மாநிலத்தில் பாஜ தலைமையிலான அரசு தாமாகவே அமைந்துவிடும் என்பதால், சபாநாயகர் இவ்வாறு இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரும், தங்கள் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடும் படி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். 

சபாநாயகரை விரைந்து முடிவெடுக்கும் படி அறிவுருத்திய உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் முன் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன் படி, எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரும் இன்று சபாநாயகர் முன் ஆஜராகி, தங்கள் ராஜினாமாவை ஏற்கும் படி நேரில் முறையிட்டுள்ளனர். 

இதனால், சட்டசபை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டள்ளது. இந்த சம்பவத்தால், அந்த மாநில அரசியலில், உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close