கர்நாடக துணை முதல்வருடன் பாஜக எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 09:22 am
karnataka-deputy-chief-minister-g-parameshwara-eating-breakfast-with-bjp-mla-suresh-kumar-at-vidhana-soudha-in-bengaluru

கர்நாடக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, பாஜக எம்.எல்.ஏ சுரேஷ்குமாருடன் காலை உணவு சாப்பிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நேற்று நாள்முழுவதும் காரசார விவாதம் நடைபெற்றது தொடர்ந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது, சட்டப்பேரவையில் கர்நாடகா அமைச்சர் டி.கே.சிவக்குமார், பாஜக எம்.எல்.ஏ ஸ்ரீராமலுவுடன் பேசினார். இது, கர்நாடக அரசியல் சூழலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்று ஆளும் கட்சியை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, பாஜக எம்.எல்.ஏ சுரேஷ்குமாருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். சாப்பிடும் போது அவர்கள் இருவரும் பேசியுள்ளது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close