கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு?

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 11:34 am
trust-vote-to-be-held-at-6pm-karnataka-speaker

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வாரம் இரு நாட்கள்(ஜூலை 18 & 19) விவாதம் நடைபெற்றது. அன்றைய தினமே(ஜூலை 19) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். ஆனால், சபாநாயகர் மற்றும் முதல்வர் அதற்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து விவாதம்  திங்கட்கிழமைக்கு (ஜூலை 22) ஒத்திவைக்கப்பட்டது. 

ஆளுநர் காலக்கெடு விதித்ததற்கு தடை கோரி முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கும் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இதற்கிடையே, இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close