கர்நாடகாவில் மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2019 06:05 pm
police-ordered-to-close-all-the-liquire-shops-and-bars-in-karnataka

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூடும் படி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக சட்டசபையில், காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களால், கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலைக்குள், பெரும்பான்மையை நிரூபிக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள முதல்வர் குமாரசாமி, இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பெங்களூரில், 144 தடை உத்தரவும், மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகள், பார்களை மூடவும், காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close