அரசியலை விரும்பாதவன் நான்: குமாரசாமி உருக்கம்!

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2019 06:24 pm
i-never-liked-to-enter-in-politics-kumarasamy

நான் பொதுவாழ்வில் நுழைய விரும்பவே இல்லை; எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. தந்தையின் சொல் கேட்டுத்தான் அரசியலில் நுழைந்தேன் என, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அந்த மாநில சட்டசபையில் உருக்கமாக உரையாற்றி வருகிறார். 

கர்நாடக சட்டசபையில், தன் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மஜத தலைவர் குமாரசாமி, சட்டசபையில் உருக்கமாக உரையாற்றி வருகிறார். அப்போது அவர், ‛‛நான் அரசியலுக்கு வர ஒருபோதும் விரும்பியதில்லை. என் தந்தையின் சொல் கேட்டுத் தான் அரசியலுக்கு வந்தேன். என்னை ஊழல்வாதி என பாஜவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என என்னை கேள்வி கேட்கின்றனர். நான் முதல்வர் பதவி வகிக்க காரணமாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி. 6 கோடி கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என அவர் பேசி வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close