நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, கர்நாடக சட்டப்பேரவை சற்றுமுன் கூடியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தீர்மானத்தின் மீது முதல்வர் எடியூரப்பா பேசி வருகிறார்.
கர்நாடகாவில் கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
ஜூலை 31ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளதன்படி, இன்று (ஜுலை 29) முதல்வர் எடியூரப்பா அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை சற்றுமுன் கூடியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தீர்மானத்தின் மீது முதல்வர் எடியூரப்பா பேசி வருகிறார்.
பெரும்பான்மை இடங்களை பாஜக கொண்டுள்ளதால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றிபெறுவதற்கு எந்த தடையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவை மொத்த இடங்கள்: 224
பாஜக : 105
காங்கிரஸ்- மஜத கூட்டணி: 100
சுயேச்சை : 2
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் : 17
பெரும்பான்மைக்கு தேவை: 104
newstm.in