நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2019 12:00 pm
yeddyurappa-wins-in-trust-vote

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆளுநரின் அறிவுறுத்தலின்படி, முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை  முதல்வர் எடியூரப்பா முன்மொழிந்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில்  முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. இதனை சபாநாயகர் ரமேஷ் குமாரும் அதிகாரபூர்வமாக சட்டப்பேரவையில் அறிவித்தார். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ உள்பட 106 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close