எடியூரப்பா அரசு வெற்றி; பதவி விலகினார் சபாநாயகர்!

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2019 12:48 pm
karnataka-assembly-speaker-resigns-his-post

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதையடுத்து, சபாநாயகர் ரமேஷ் குமார் பதவியில் இருந்து விலகினார். 

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆளுநரின் அறிவுறுத்தலின்படி, முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியினை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவையிலே அறிவித்தார். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிறகு, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எடியூரப்பா முடிவு செய்திருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close