தமிழர்கள் என்பதை மறைத்து வாழும் நிலையை உருவாக்க கூடாது

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2019 05:19 pm
tamils-should-not-make-a-living-in-hiding-sumalatha-mp

கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் தமிழர்கள் என்பதை மறைத்து வாழும் நிலையை உருவாக்க கூடாது என்று, மக்களவையில் நதிநீர் பங்கீடு தொடர்பான மசோதா மீதான விவாதத்தின்போது கர்நாடக எம்பி சுமலதா இவ்வாறு பேசினார்.

மேலும், தண்ணீர் பிரச்னைகளை மத்திய அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று பேசிய அவர், ஐடி போன்ற முக்கிய தொழில்களின் மையமாக இருக்கும் பெங்களூருவுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நதிநீர் பங்கீடு தொடர்பான மசோதா மீதான விவாதத்தில் பேசிய கேரள எம்பி பிரேமச்சந்திரன், ‘முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் தயக்கமில்லை. ஆனால், தண்ணீர் வழங்கப்படுவதில் கேரள மாநில அரசின் சட்டத்திற்குட்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்’ என்றார். மேலும், வழக்குகள் மூலமாக மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் தீர்க்க முடியாது என்றும் கேரள எம்பி பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close