காஷ்மீரில் என்ன நடக்கிறது? மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்- ஒமர் அப்துல்லா

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 03:06 pm
omar-abdullah-press-meet-after-meets-governor

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே, அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா இன்று, ஆளுநர் சத்ய பால் மாலிக்கை, நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா, "காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், எதோ நடக்க போகிறது என்று மட்டுமே கூறுகிறார்கள். மக்கள் மிகவும் பதற்றமான நிலையில் உள்ளனர். 

ஆளுநரிடம் சந்தித்து காஷ்மீரின் நிலை குறித்து கேட்டேன். காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டங்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க போகிறீர்களா? என ஆளுநரிடம் கேட்ட போது, அம்மாதிரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்போவதில்லை என்று ஆளுநர் கூறினார். 

இருந்த போதிலும், ஆளுநரின் வார்த்தைகள் இறுதி வார்த்தைகள் கிடையாது. மத்திய அரசு தான் பதில் சொல்ல வேண்டும். அதுவே இறுதி வார்த்தையாக இருக்கும். 

அமர்நாத் யாத்திரை ஏன் நிறுத்தப்பட்டது? யாத்ரீகர்களை ஏன் வெளியேறுகிறார்கள்? ராணுவப்படைகள் குவிக்கப்பட்டது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் பதற்றத்தை குறைக்கும் வகையிலான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட வேண்டும். மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று பேசியுள்ளார். 

newstm.in

உருவாகிறது புதிய மாநிலம்; உடைகிறது ஜம்மு - காஷ்மீர்?

பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close