தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அமித் ஷா சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 01:36 pm
amit-shah-meets-nsa-ajit-doval-amid-tension-over-kashmir

ஜம்மு காஷ்மீரில் போர் மேகம் சூழ்ந்து வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கும் பொருட்டு மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் துணை ராணுவப்படையினர் 10,000 பேர்  காஷ்மீரில் குவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முன்தினம் மேலும் 28,000 வீரர்களை காஷ்மீருக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நேற்று எல்லையில் ஊடுருவ முயற்சி செய்த பாகிஸ்தானிய படையைச் சேர்ந்த 7 பேரை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியுள்ளது.  சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடலை வெள்ளைக்கொடியுடன் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டிற்கு இந்திய ராணுவம் சலுகை வழங்கியுள்ளது. ஆனால், இது தொடர்பாக பாகிஸ்தான் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, இம்மாதிரியான நேரத்தில் வழக்கமாக செய்வது போல, பாகிஸ்தானியர்களின் உடலுக்கு இந்திய ராணுவத்தினரே இறுதிச்சடங்கு செய்யலாம் என்று தெரிகிறது. 

காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே, காஷ்மீரின் தற்போதைய சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மேலும், காஷ்மீருக்கு இரண்டு முறையும் துணை ராணுவப்படையினரை அனுப்ப உத்தரவிட்டது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

newstm.in

பாகிஸ்தானியர்களின் உடலை பெற்றுக்கொள்க: சலுகை வழங்கும் இந்திய ராணுவம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close