சிறப்பு அந்தஸ்து ரத்து, தைரியமான முடிவு: ஆர்.எஸ்.எஸ்.

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2019 05:28 pm
abolition-of-special-status-bold-decision-of-central-government-rss-chairman-mohan-bhagwat

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்பது, மத்திய அரசு எடுத்த மிகவும் தைரியமான முடிவு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பாரட்டு தெரிவித்துள்ளார்.

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து நீக்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கவும்,  ஜம்மு- காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக உருவாக்கவுள்ளதாகவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்து குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றுள்ளதாக, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிவித்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்க மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் தைரியமானது, இந்த முடிவை நான் வரவேற்கிறேன்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close