ஜம்மு காஷ்மீர் மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டது குறித்து விளக்கம் அளித்து வரும் உள்துறை அமைச்சர் , இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் குறித்து பார்லிமென்டில் விரிவாகப் பேசி வருகிறார்.370 ஆவது சட்டப்பிரிவு,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது போதும்,அங்கு அரசின் நலத் திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்ததாக குற்றம் சாட்டினார்.மேலும் சுற்றுலா,சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகள் வளர்ச்சி அடையாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் நலன் கருதியே,இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்து பேசி வருகிறார்.காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவருக்கும்,உரிய விளக்கம் அளிக்க தான் தயாராக இருப்பதாகவும்,அந்த முன் கேள்விகளை முன்வைக்கும் படி எதிர்க்கட்சியினருக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
newstm.in