'சொன்னதைச் செய்த மோடி' - வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 12:59 pm
pm-modi-s-photo-is-vairal-in-social-media-reg-kashmir-issue

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி 1992ஆம் ஆண்டு காலகட்டத்தில் போராட்டம் நடத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (விதி 370 & 35A ) திரும்பப் பெறப்படுவதாக நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். 

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை பாஜகவினர் மற்றும் தேசிய சிந்தனை கொண்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். காஷ்மீர் பண்டிட்டுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து, 'தங்களது மாநிலத்துடன் இணையப் போவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ராம் மாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு, "பிரதமர் மோடி சொன்னதை செய்துவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடி 1992ம் ஆண்டு காலகட்டத்தில் போராட்டம் நடத்திய போது எடுத்த புகைப்படமே இதுவாகும். இந்த புகைப்படத்தில் பின்புறத்தில் உள்ள பலகையில் 'சட்டப்பிரிவு 370யை நீக்கி, பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டு மக்களை பாதுகாப்போம்' என்பன போன்ற வாசகங்கள் ஹிந்தியில் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 'சொன்னதை செய்த மோடி' என்று பாஜகவினர் பலரும் தங்களது பக்கத்தில், இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.  

— Ram Madhav (@rammadhavbjp) August 5, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close