ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு நாளை புதிய விடியல் காத்திருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 09:53 pm
jammu-and-kashmir-people-await-new-dawn-tomorrow-pm-narendra-modi

ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு  நாளை புதிய விடியல் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. இதையடுத்து, சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் மாறுகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், இதுதொடர்பாக பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில், 'ஜம்மு, காஷ்மீர், லடாக் சகோதர, சகோதரிகளின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள். சுயநல குழுக்கள் மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல் உணர்ச்சிப்பூர்வமாக அச்சுறுத்தி வந்தனர். ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு  நாளை புதிய விடியல் காத்திருக்கிறது. ஒன்றாக இணைந்து, ஒன்றாக உயர்ந்து, ஒன்றிணைந்து 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close