சுஷ்மாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2019 04:26 pm
sushma-swaraj-final-tributes-at-at-lodhi-crematorium

மறைந்த மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். இன்று காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். 

அதைத்தொடர்ந்து, பாஜக தலைமையகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அங்கு சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த அவருக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பாஜக தலைமையகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அவரது உடல் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் வைக்கப்பட்டது. 

டெல்லி லோதி சாலையில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. மயானத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்டோர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பூட்டான் நாட்டின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர். 

பின்னர், அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

newstm.in

அயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close