காஷ்மீர் விவகாரம்: இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை!

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 11:40 am
prime-minister-narendra-modi-will-address-the-nation-in-a-special-broadcast-by-all-india-radio-at-4-pm-today

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார். 

நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்படுவதாகவும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்களாக உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்படுவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

இதனால் கடந்த சில தினங்களாக காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெட்ஒர்க் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஏன் திரும்பப்பெறப்பட்டது ? என்பது குறித்து அவர் மக்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close