மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கவலைக்கிடம்?

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 12:28 pm
bhopal-madhya-pradesh-former-chief-minister-bjp-leader-babulal-gaur-continues-to-be-in-a-critical-condition-at-narmada-hospital

மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கவுர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் நர்மதா மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர் ஆகஸ்ட் 2004 முதல் நவம்பர் 2005ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும், போபாலில் உள்ள கோவிந்தபுரா தொகுதியில் இருந்து 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close