காஷ்மீர், லடாக்கின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 08:44 pm
no-one-can-stop-the-development-of-kashmir-and-ladakh-prime-minister

நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் இன்று உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘காஷ்மீர், லடாக்கின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இனிமேல் காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. காஷ்மீரிலிருந்து வெளியேறி நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீரிகள் மீண்டும் தங்கள் சொந்த ஊரில் குடியேற அனைத்து உதவிகளும் செய்யப்படும். அரசின் செயல்பாட்டில் மாற்றுக்கருத்து இருக்கலாம்; அதை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், தேசதுரோக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தேசத்திற்கு எதிராக பேசுதல் போன்றவை கூடாது.

வரும் பக்ரீத் பண்டிகையை காஷ்மீர் மக்கள் எந்த சிக்கலும் இல்லாமல் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். அவர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள். புதிய காஷ்மீரை வடிவமைக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் ’ என பேசி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை முடித்துக்கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close