சிக்கிமில் அதிரடி காட்டிய பாரதிய ஜனதா!

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 02:12 pm
the-10-mlas-of-the-sikkim-democratic-front-party-have-joined-the-bharatiya-janata-party

சிக்கிம் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சியாக உள்ள சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம் எல் ஏக்கள், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வாயிலாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் 1994 முதல் கடந்த மே வரை 24 ஆண்டுகள் பதவி வகித்து இந்தியாவிலேயே  நீண்ட நாட்கள் முதல்வர் பதவியிலிருந்த பெருமைக்குரியவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி  கட்சியின் தலைவரும், முன்னால் முதலமைச்சருமான  பவன் சாம்லிங்.

ஆனால் இவரது கட்சி மே  2019ல் நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியிடம் தோல்வியை சந்தித்து, சிக்கிம் மாநிலத்தின் எதிர்க்கட்சியாக தற்போது இருந்து வருகிறது.

இந்நிலையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னிலையில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த 10 எம் எல் ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைந்துக்கொண்டனர். 

டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதாவில் இணைந்துள்ள 10  எம்எல்ஏக்களை வாழ்த்திப் பேசிய ராம் மாதவ்: சிக்கிம் மாநிலத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக  திகழ்வோம் என தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக பிரேன் சிங் தமாங் பதவி வகித்து வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close