பாதுகாப்பை குறைத்துக்கொள்ளும் உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல்!

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 08:31 pm
uttar-pradesh-governor-anandiben-patel-wants-to-reduce-her-security

உத்திரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் தனக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனந்திபென் படேல் குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர். தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராகவும், மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் இவர், தனக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். தனக்கு பாதுகாப்பு வழங்கும் வீரர்களில் 50 பேரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close