மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆனார் மன்மோகன் சிங்!

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2019 07:14 pm
manmohan-singh-elected-to-rajyasabha

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் 1991 முதல் 2019 ஜூன் வரை, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.,யாக பதவி வகித்தார். அவரின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து வேறு மானினத்திலிருந்து அவரை எம்பி ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. 

இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்பி மதன் லால் சைனி காலமானதை அடுத்து, அங்கு ராஜ்யசபா எம்பிக்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில், மன்மோகன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு போட்டியாக பாஜக யாரையும் களம் இருக்கது என அறிவித்ததை அடுத்து அவர் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாக தேர்வானார். 

அந்த மாநிலத்தின் 25 லோக்சபா எம்பிக்கள் மற்றும் 9 ராஜ்யசபா எம்பிக்கள் அனைவரும் பாஜகவினர் என்ற நிலையில் மன்மோகன் சிங் மட்டுமே ஒரே ஒரு காங்கிரஸ் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close