முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா?

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2019 07:43 pm
inx-media-case-hearing-tomorrow-will-chidambaram-get-bail

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழங்கி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. 

மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதில் விதிகளை மீறி அனுமதி பெற்று தந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சிதம்பரத்திற்கு தெடர்பு இருப்பதாக வாக்கு பதிவாகியுள்ளது. 

இந்த வழக்கில் தான் எந்நேரமும் கைதாகலாம் என்பதால், முன் ஜாமின் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்றுள்ளதால், இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. 

இதில் சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா அல்லது மறுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close