அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2019 08:39 pm
prime-minister-narendra-modi-talks-with-us-president-trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேசியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தயின்போது, இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டிவிடுவதாகவும், வன்முறையை தூண்டிவிடுவது பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல எனவும் ட்ரம்பிடம் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பிடம் தெரிவித்தார். 
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில் அமெரிக்க அதிபருடன் பிரதமர் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்ரம்புடன் தொலைபேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close