முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் 

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 05:01 pm
chidambaram-moves-to-sc-for-anticipatory-bail

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், டில்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமின்  வழங்க மறுத்ததை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை பெறுவதில் விதிகள் தளர்த்தப்பட்டதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைதாகி ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வழக்கை விரசரித்த சிறப்பு நீதிமன்றம் தொடந்து பல முறை முன் ஜாமின் வழங்கி வந்த நிலையில், சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் கடும் ஆட்சேபனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது. எனினும் சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று, மூன்று நாட்களுக்கு அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

இதனால் மூன்று நாட்களுக்கு பின் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியிருப்பதால், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சீண்டம்பரத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close