மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ்?

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 10:06 pm
ed-gives-look-out-notice-against-p-chidambaram

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்திற்கு நேரில் ஆஜராகும்படி இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த சூழ்நிலையில், ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close