இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 03:25 pm
there-is-no-place-for-temporary-in-india-everything-is-permanent-prime-minister

‘இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை. இங்கு எல்லாம் நிரந்தரம் தான். இனி புதிய இந்தியாவை காணலாம்’ என்று, பிரான்ஸ் யுனஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரான்ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸீல் உள்ள யுனஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.

அவரது உரையில், ‘நீர் மேலாண்மைக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முத்தலாக் முறை முடிவுக்கு வந்ததால் பெண்களின் மரியாதை காப்பாற்றப்பட்டுள்ளது. எத்தனை பேர் எதிர்த்தாலும் எதிர்கால தலைமுறை இதை ஆசிர்வதிக்கும் இதை ஏற்கும். இது போன்ற நடவடிக்கைகளை மட்டுமே இந்த புதிய அரசு மேற்கொள்ளும்.

இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் பார்லிமென்டில் அவ்வளவு பணிகள் நடைபெற்றுள்ளன. இது மோடியால் நடந்ததல்ல நாட்டு மக்களால் நடந்தது. இன்று சந்திரயான் திட்டம் வெற்றிபெற்றுள்ளது. உலக அரங்கில் நம் சக்தி மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், பிரான்ஸ்க்கும் இடையே ஒற்றுமை உள்ளது. நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். 

இந்தியாவும் பிரான்சும் இணைந்தது தான் இன்பிரா. அது சோசியல் இன்பிராவாக இருந்தாலும் சரி வேறு எந்த இன்பிராவாக இருந்தாலும் சரி. இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவுடனான பிரான்ஸின் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
விநாயகர் சதுர்த்தி இங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கும் கணபதி பப்பா மோரியா முழக்கங்கள் அதிகரித்துள்ளன. உங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை. காந்தி, புத்தர், கிருஷ்ணர், ராமர் பிறந்த பூமியில் 70 ஆண்டுகளாக தற்காலிக நடவடிக்கைகளே இருந்துள்ளன. இனி அது இருக்காது. இங்கு எல்லாம் நிரந்தரம் தான். இனி புதிய இந்தியாவை காணலாம். நன்றி!’ என்று தனது உரையை பிரதமர் நரேந்திர மோடி முடித்துக்கொண்டார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து தான், தற்காலிகம் நிரந்தரம் என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close