அடிக்கடி ஆயுதங்களின் நினைப்பு வருகிறது: ராஜ்நாத் சிங்

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 07:53 pm
rajnath-singh-speech-in-front-of-bjp-workers

''பாதுகாப்பு துறை அமைச்சர் என்பதால், அடிக்கடி ஆயுதங்களின் ஞாபகம் வருகிறது'' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.  

உத்தரபிரதேசத்தில், பாஜகவினர் மத்தியில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: '' உத்தரபிரதேசத்தில், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ளனர். 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றிபெற்றுள்ளதென்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. 

303 என்பது எவ்வளவு சக்திவாந்த எண் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடவுளின் அருள் இன்றி இவ்வளவு பெரிய வெற்றி சத்தியம் இல்லை. தொடர்ந்து மக்கள் மத்தியில் நற்பெயருடன் ஆட்சி புரிய வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் என்பதால் எப்போதும் ஆயுதங்களின் நினைப்பு வருகிறது'' என்றார்.

.303 என்பது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகை துப்பாக்கி ஆகும். அதை குறிப்பிடும் வகையில் ராஜ்நாத் சிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close