எனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன்: பிரதமர் மோடி

  அனிதா   | Last Modified : 24 Aug, 2019 01:44 pm
i-have-lost-a-valued-friend

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன் என கூறியுள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இன்று நண்பகல் காலமானார். இதுகுறித்து தகவல் அறிந்து, அபுதாபியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அருண்ஜெட்லியின் மனைவி சங்கீதா  மற்றும் மகன் ரோஹன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். அருண் ஜெட்லி உயர் அறிவு - சட்டத்திறன் மிகுந்தவர் என்றும் அரசியலில் மிகச்சிறந்த ஆளுமை கொண்டவராக திகழ்ந்தவர் என்றும் கூறிய பிரதமர் தனது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

தொலைபேசியில் பேசிய போது, பிரதமர் தனது தற்போதைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்யக்கூடாது என்று அருண் ஜெட்லி மனைவி மற்றும் மகன் இருவரும் வலியுறுத்தினர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close