காஷ்மீர்: திருப்பி அனுப்பப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

  அனிதா   | Last Modified : 24 Aug, 2019 03:42 pm
opposition-leaders-in-kashmir-have-been-repatriated

காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்  இன்று ஜம்மு -காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக காஷ்மீர் வருவதாக தெரிவித்திருந்தனர். 

இதனிடையே, காஷ்மீரில் பிரிவினை வாதிகள், வன்முறையாளர்கைளை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்க்கட்சியினர் காஷ்மீருக்கு வருவது மக்களுக்கு தேவையற்ற அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே தலைவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என காஷ்மீர் அரசு வேண்டுகோள் விடுத்தது. 

இந்நிலையில், ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா, தினேஷ் திரிவேதி உள்ளிட்ட 12 பேர் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றடைந்த எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கிருந்தே திருப்பி அனுப்பப்பட்டனர். 

முன்னதாக எதிர்க்கட்சி எம்.பியான ராகுல் காந்தி காஷ்மீரில் மக்கள் துன்பப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார். அப்போது, காஷ்மீர் ஆளுநர், ராகுல் காந்திக்கு விமானம் அனுப்பி வைப்பதாகவும் அவர் வந்து இங்குள்ள நிலைமையை பார்த்துவிட்டு செல்லட்டும் என கூறியிருந்தார். இதற்கு ராகுல், பல்வேறு நிபந்தனைகள் தெரிவித்ததையடுத்து அந்த நிகழ்வு ரத்தானது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close