பிளாஸ்டிக் இல்லா பாரதம்: பிரதமர் மோடி சபதம்!

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 11:38 am
modi-speech-on-man-ki-baath

''மகாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டில் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத பாரதம் என்பது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா பார்த்ததை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்'' என, பிரதமர் நரேந்திர மோடி எஅழைப்பு விடுத்துள்ளார்.

மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம், ரேடியோ வழியாக மக்கள் மத்தியில், உரையாற்றிய பிரதமர் மோடி பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

அவர் மேலும் பேசியதாவது: வரும் அக்டோபர் 2ல், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகமே உன்னிப்பாக கவனிக்கும் இந்த நாளில், இந்த ஆண்டு திறந்த வழி கழிப்பிடங்கள் இல்லாத இந்தியாவை உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அத்துடன் பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்க, இந்த ஆண்டு முதல் உறுதி மொழி ஏற்போம். அதன்படி செயல்படுவோம். நம் தாய்நாட்டை பிளாஸ்டிக் மாசிலிருந்து காப்போம் '' என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close