அருண் ஜெட்லி உடலுக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி!

  அனிதா   | Last Modified : 25 Aug, 2019 12:15 pm
leaders-pay-tribute-to-arun-jaitley

டெல்லி பாஜக தலைமையகத்தில் உள்ள அருண் ஜெட்லி உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் நேற்று நண்பகல் உயிரிழந்தார். அவரது உடல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லியின் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோஹ்ரா, என்.சி.பி தலைவர்கள் ஷரத் பவார்,  பிரபுல் படேல், ஆர்.எல்.டி தலைவர் அஜித் சிங்  உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இதேபோல் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் திமுக சார்பில் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close