என்னை குமாஸ்தா போல் நடத்தினார்கள்: முன்னாள் முதல்வர் ஆதங்கம் 

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2019 11:00 pm
congress-treated-me-as-a-clerck-kumarasamy

"ஒரு முதல்வர் என்றும் பாராமல் என்னை மிகக் கேவலமாக நடத்தினர். மொத்தத்தில் நான் ஒரு குமாஸ்தா போலவே நடத்தப்பட்டேன்"என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தன்னை ஓர் குமாஸ்தா போல நடத்தியதாகவும், முதல்வர் என்ற பதவிக்கு கூட மரியாதையை தரவில்லை என்றும் அவர் மிகவும் வருத்தப்பட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

வரும் இடைத்தேர்தல்களில் தங்கள் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் இரு கட்சிகளிடையே இருந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close