கொதித்தெழுந்த முஸ்லிம் பெண்கள்: முத்தலாக்கிற்கு எதிராக 216 வழக்குகள் பதிவு

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 06:35 pm
216-muslim-womens-registerd-case-gainst-triple-talaq

நாட்டில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறைக்கு எதிரான சட்டம் இயற்றிய பிறகும், நாட்டின் பல பகுதிகளிலும் அந்த கொடுமை இன்னும் நடைபெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.எனினும், இது வரை ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி வாய்மூடி கிடந்த முஸ்லீம் பெண்கள், தற்போது துணிச்சலாக காவல் நிலையம் வந்து புகார் அளிக்க துவங்கியுள்ளனர். 

முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்ட சில நாட்களிலேயே, உத்தர பிரதேசத்தில் 216 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, போன், எஸ்.எம்.எஸ்., என பல முறைகளில் தங்கள் மனைவியரிடம் மூன்று முறை தலாக் கூறிய கணவனுக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அதிகப்படியாக ஷஹாரன்பூரில், 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மீரட், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி ஆகிய பகுதிகளிலும், முத்தலாக் முறையை எதிர்த்து வழக்குகள் பதிவாகியுள்ளன. 

முத்தலாக் முறை சட்ட விரோதம் ஆக்கப்படுவதற்கு முன் வாய் மூடி கிடந்த அப்பாவி முஸ்லீம் பெண்கள், தற்போது மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் தங்களுக்கு எதிரான கொடுமையை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கியுள்ளதாக அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close