வயநாட்டு மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி!

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 10:37 pm
rahul-gandhi-visits-flood-hit-constituency-wayanad

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இன்று அவர் பார்வையிட்டார்.

தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து அதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டிற்கு ஏற்கனவே ஒருமுறை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரைந்து தர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், இரண்டாவது முறையாக அவர் கேரளாவின் வயநாடு தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களது நிலைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் அங்கு தங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close