எந்த உள்நாட்டு விவகாரத்திலும் இந்தியா தலையிட்டதில்லை: வெங்கையா சூசக பேச்சு

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2019 02:42 pm
india-has-not-intervened-in-any-internal-affairs-venkaiah

இந்தியாவின் அங்கமான காஷ்மீர் விவகாரத்தில் யாரும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, " எந்த உள் நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்டதில்லை என்றம் இந்தியாவின் அங்கமான காஷ்மீர் விவகாரத்தில் யாரும் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். 

இந்தியா எந்த நாட்டையும் தாக்கியதில்லை. இனியும் யார் மீதும் தாக்குதல் நடத்த போவதில்லை என்றும் அதேநேரத்தில், யாராவது நம்மை தாக்கினால் பதில் தாக்குதல் நடத்துவோம். அதை அவர்கள் வாழ்நாளில் மறக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.  நமது அண்டை நாடு தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்து மனிதநேயத்தை அழித்து வருகிறது என்று குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, எதிர்காலத்தில் தீவிரவாதமே அவர்களை அழித்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். 

Newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close