காஷ்மீரில் கால் பாதிக்கும் மகாராஷ்டிரா சுற்றுலா துறை 

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 06:58 pm
maharashtra-government-decided-to-build-a-resort-in-srinagar

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு வேறு உணின் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பின், அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டது. இதையடுத்து, வெளி மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள், தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்கள் அங்கு நிலம் வாங்கவும், தொழில் துவங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, காஷ்மீர் மற்றும் லடாக்கில் மகாராஷ்ட்ரா மாநில சுற்றுலா துறை சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய நட்சத்திர ஓட்டல் கட்டவும், மலையேற்ற பயிற்சி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து, அந்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராவல் கூறுகையில், "காஷ்மீரின் ஸ்ரீநகரில், மகாராஷ்ட்ரா சுற்றுலா துறை சார்பில் சகல வசதிகளுடன் கூடிய ரெசார்ட் கட்டப்படும். லடாக்கில் மலையேற்ற பயிற்சி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள், 15 நாட்களில் துவங்கப்படும்" என்றார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close